இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal



சர்வதேச பொருளாதார நிலை, உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை கொண்டு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணங்களை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் வேறுபாடு உள்ளிட்டவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

இந்த நிலையில்,  இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.25,512-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு ரூ. 25,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது 

ஆனால் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 43.70 காசுகளுக்கும், ஒரு கிலோ ரூ.43,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold rate increased


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->