இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்வதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னையில் மாலை பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 13.8 மி.மீ மழை பதிவானது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்தது.இதுபற்றி சென்னை வானிலை அதிகாரி கூறுகையில்,தற்போது தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இருக்கும் மாவட்டங்களில் இந்த ஆண்டு பரவலாக கனமழை பெய்திருக்கிறது.

மேலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பசலனம் அதிகமாக உள்ள காரணத்தால் பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்றும் சென்னையில் மழை பெய்யா வாய்ப்புள்ளது. ஆனால் நேற்று பெய்ததைவிட இன்று குறைவாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுறது என்று தெரிவித்தார். 
 

English Summary

today expect to rain in chennai


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal