தமிழகம் விரைகிறார் அமித் ஷா! விமானநிலையத்தில் காத்திருக்கும் தொண்டர்கள்! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal



மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். காலை 10.15 மணியளவில் மதுரைக்கு வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் அவர், அதன் பின்னர் அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சுப்புலட்சுமி லட்சுமிபதி தனியார் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக  முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதிக்கு செல்லும் அமித் ஷா, நன்பகல் 12.30 மணியளவில் நடக்கு ‘ராமநாதபுரம் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today amitshah comming Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->