கல்லணையில் தடுப்பை மீறி காவிரிக்காக போராட்டம் செய்த விவசாய சங்கத்தினர் அதிரடி கைது!. - Seithipunal
Seithipunal


காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடி ஓய்ந்து விவசாயம் இழந்து. தற்போது குருவை சாகுபடிக்காச்சும் தண்ணீர் வருமா ஏற்றத்தில் ஏங்கிவருகின்றனர் காவிரி டெல்டா மாவட்ட மக்கள்.

இதுவரை திறந்துவிடாத காவிரி தண்ணீரை,  குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரையாவது  திறந்துவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும். 

தமிழக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. 

அதேபோல் நேற்று கல்லணையில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மேலும் இதில் காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு கல்லணையில் மண்வெட்டியால் கொத்தி நெல் விதைகளை தூவி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இவர்களின் போராட்ட அறிவிப்பினை அடுத்து விவசாயிகள் கல்லணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனாலும் விவசாயிகள் மாற்று பாதையில் வந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 26 பேரையும் கைது செய்தனர். அவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

To open the Cauvery water, arrest the farmers who staged a protest in the kallanai.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->