தள்ளு.. தள்ளு.. தள்ளு.! அதிரடி திட்டம்! ஐயோ அம்மா திட்டம்!! பாதியிலேயே பல் இளித்து நின்ற தமிழக அரசின் சொகுசு திட்டம்!! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதி, மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட புதிய சொகுசு பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தற்போது இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் இருக்கை, கண்ணாடி போன்றவை உடைந்து சேதமடைந்த பழைய பேருந்து ஆகும். மேலும், அவற்றில் பயணம் செல்வதால் நேரம் மிகவும் அதிகரிப்பதால்  பயணிகள் தனியார் பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதனால், அரசு பேருந்து பெரும்  நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
 
நேற்று முதல் 500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை, மின் விசிறி, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.

புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2-ம் தேதி திங்களன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து புதிய பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில். 30 பேருந்துகள் நாகர்கோவில் - நெல்லை இடையே நடத்துனர் இல்லாத பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு வாங்கிய புதிய பேருந்துகள் இயக்க தொடங்கிய 2வது நாளிலேயே பழுதாகி நடுவழியில் நின்றது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய பேருந்து உடனே பழுதாக வாய்ப்பில்லை என்பதால் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn worst bus service


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->