பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் இனி கவலை பட வேண்டாம்! தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


“ஆன்ட்டி ரோமியோ ஸ்குவாட்” அறிமுகம் – மாணவிகளைக் கேலி செய்வதைத் தடுக்க….

பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவிகளின் பெற்றோர், தற்போதுள்ள கால கட்டத்தில், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளது போல தவிக்கின்றனர்.

இதற்கு ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, ராமநாதபுரம் காவல் துறை சார்பில், “ஆன்ட்டி ரோமியோ ஸ்குவாட்” அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

இதன் படி, காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள, பெண்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, போலீசார் ரோந்து பணி செய்து வருவார்கள்.

இதற்காக ராமநாதபுரம், திருவாடனை, ராமேஸ்வரம், முதுகுளத்துார் உள்ளிட்ட 7 டிவிசன்களில் மொத்தம் 28 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் டூ வீலரில் சென்று ரோந்து வரும் பணியை, நேற்று, எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

“மாணவிகளை கேலி செய்வது, பின் தொடர்ந்து தொல்லை தருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கண்டறியப் பட்டால், அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

இது போல, தமிழ்நாடு முழுக்க இருந்தால், தேவலையே என்று, அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN POLICE NEW ACTION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->