கடும் சிரமத்திற்கு உள்ளான அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி கவலை இல்லை.! வெளியான அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பேருந்துகளில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு இலவச பஸ் பாஸ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை அரசு பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பலதரப்பினரும் முன் வைத்தனர். 

இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, தமிழக பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும், பஸ் பாஸ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை, அவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தரப்பில் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் ஒரு வாரத்தில் அணைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

English Summary

tn minister announce to bus pass issueSeithipunal