தமிழக - கேரள அதிகாரிகள் முக்கிய ஆலோசனை - தேர்தல் நேரத்தில் தொற்றிக்கொண்ட பரபரப்பு..? முடுக்கி விடப்படும் வாட்ஸ்ஆப் குழுக்கள்..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக - கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கேரள பொதுப் பணித்துறை அரண்மனையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சைமன்ராஜ், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலரும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான முத்துராமலிங்கம், தென்காசி கோட்டாட்சி தலைவரும், முதன்மை தேர்தல்அலுவலருமான சவுந்தர்ராஜன், தென்காசி டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன், கேரள மாநில தனிப்பிரிவு அதிகாரி முகமது இஸ்மாயில், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி மற்றும் தனிப்பிரிவு, உளவுத்துறை உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மற்றும் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் இருவரும்கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறுகையில், இந்திய நாடாளுமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது, இரு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இரு மாநில அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து தேர்தல் குறித்த தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் பகிர்ந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதியும், கேரளாவில் ஏப்ரல்23-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் இரு மாநிலங்களிலும் வாக்குரிமை உள்ளவர்களை கண்காணிப்பது, இரு மாநில அதிகாரிகள் கூட்டாக இணைந்து வாகன சோதனை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn-kerala-police-officials-meeting-in-courtallam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->