கோவை அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 5000 ரூபாய் பணத்துடன் ஒரு கிராம் தங்கம்.! அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையானது குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில வழி பாடத்தின் மீது கொண்ட மோகமே காரணமாகும். இதனால் தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வரவில்லை.

அதனால், அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலையானது உருவாகி பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் மூடப்பட்டு, அந்த பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் கோனார்பாளையம் தொடக்க பள்ளியில், பல ஆண்டுகளாக 6 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதில் கடந்த கல்வி ஆண்டு முடிவில் 5-ம் வகுப்பு முடித்த 2 பேர் கானூர்புதூர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று விட்டனர்.


 
இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 10-க்கு குறைவாக இருப்பதால் பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் முதலில் சேரும் 10 மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும்  

மேலும், பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்த பள்ளியில் சேரும் 2 செட் சீருடைகள் வழங்கப்படும் என நோட்டீஸில் அச்சடித்து பள்ளியின் சுற்று வட்டார பகுதிகளில் கொடுத்தனர்.இதற்கு பலன் அளிக்கும் வகையில் நேற்று 2 மாணவிகள் உள்பட 3 பேர் பள்ளியில் சேர்ந்தனர். இதனால் மாணவர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT SCHOOL ADMISSION NEW METHOD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->