#BREAKING சற்றுமுன்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! தடுத்தால் உடனடி கைது.!! - Seithipunal
Seithipunal


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நேற்று நடந்த தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலுள்ள 420 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மேலும், ரூபாய் 10000 சம்பளத்தில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 40000 தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்கு வர உள்ளனர். 

இந்நிலையில், இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு திரும்பவில்லை எனில் தங்களது பணியில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மேலும், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்ய வேண்டும்'' என்று அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT NEW ORDER IN TEACHER STRIKE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->