மீண்டும் தலைதூக்கும் நியூட்ரினோ திட்டம்.! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!!  - Seithipunal
Seithipunal


 

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அரசு அங்கு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு அங்குள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேலையில்., பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. 

நியூட்ரினோ திட்டம் என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் அணுத்துகள்களை கொண்டு ஆராய்ச்சி செய்வதே ஆகும். அந்த ஆராய்ச்சிக்கு தேனீ மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள அம்பரப்பர் மலைப்பகுதியை குடைந்து ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசானது தொடங்கியது. 

இந்த திட்டமானது தொடங்கப்பட்டால் அங்குள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுசூழல்  ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 

இத்தனை கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியும்., டாடா நிறுவனம் சமர்ப்பித்த மனுவை மையமாக கொண்டு தமிழக அரசிடம் எந்தவிதமான ஆலோசனையையும் கேட்காமல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. 

இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் மூலம் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலமாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த பசுமை தீர்பாயமானது நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் இடமானது மலைகள் சார்ந்த பகுதி என்பதால் தேசிய வனவிலங்கள் வாரியத்தில் முழுமையான அனுமதி பெட்ரா பின்னரே இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தனது தீர்ப்பை வழங்கியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT AGAINST TO Neutrino PLAN., WILL APPEAL COURT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->