ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழக அரசு - சுமூகமான நிலை ஏற்படுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை பன்னிரண்டு மணி அளவில் அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழுவின் முப்பது பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.இதில், அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துச்சாமி மற்றும் அன்பின் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், காலவரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government talks with jacto jeo executives


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->