தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.! முதல்வர் எடப்பாடி பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர் காளவாசல் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்ட அடிகள் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, ''தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதாக'' தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில், காளவாசல் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் 2012 -13 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அறிவிக்கப்பட்டது . 

அதன்படி, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காளவாசல் சந்திப்பில் ரூ 54 கோடி மதிப்பீட்டில் இந்தப் பாலம் கட்டப்படுகிறது. 4 வழித்தடம் கொண்ட  இந்த மேம்பாலத்தின்  மொத்த நீளம்  750. மீட்டர் ஆகும், 15 மாதத்திற்குள் கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, இன்று அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும், சில பூமி பூஜையும் நடைபெற்றது. 

இந்தவிழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் மதுரை வந்தனர். அடிக்கல் நாட்டுவிழாவின் ஏற்பாடுகளை 'அமைச்சர் செல்லூர் ராஜூ' மிகச் சிறப்பாக செய்திருந்தார். அப்போது விழாமேடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ''மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு கோரிப்பாளையம் பகுதியால்  புதிய மேம்பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பெருமை வாய்ந்த வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், கழிவுநீர் ஆற்றில் வந்து கலக்கும் இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்து, பின் அந்த நீர் ஆற்றில் விடப்படும்,  இதனால் வைகை ஆற்றின் தன்மை பாதுகாக்கப்படும். மேலும், தற்போது தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பாதையை நோக்கிச்  சென்று கொண்டிருப்பதாக'' தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn developed tn cm proud


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->