திருப்பூர் குமரனின் குடும்பத்திற்காக, காமராஜர் வழங்கிய பெரிய நன்கொடை…! நினைவு நாளில், தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி…! - Seithipunal
Seithipunal


 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன், தேசப் பற்று அதிகம் இருந்த காரணத்தால், திருப்பூரில் பணி புரிந்து கொண்டே தேச பந்து இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். காந்தி மேல் அவருக்கு அவ்வளவு தீராத பற்று!

தன் வேலை நேரம் போக, மற்ற நேரங்களில், தன் வீட்டிற்கு கூடச் செல்லாமல், தேச பந்து  இயக்க அலுவலகத்திலேயே இருப்பார். தன் தோழர்களுடன், அடுத்து என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசனை செய்து கொண்டே இருப்பார்.

1932-ஆம் ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும், துளிர் விட ஆரம்பித்த போது, அதற்காகப் போராட்டம் நடத்துவதற்காக, 1932 ஜனவர் 10-ஆம் தேதி, மூவர்ணக் கொடியை ஏந்திக் கொண்டு, முன்னே நடந்து சென்றார். அவர் பின்னே, மற்ற தொண்டர்களும் அணி வகுத்துச் சென்றனர்

அவர்களின் ஊர்வலத்தை ஆங்கிலேய போலீசார் தடுத்தனர். ஆனாலும், ஊர்வலம் தொடர்ந்தது. ஒரு ஆங்கிலேய போலீசார், முன்னால் கொடி பிடித்துச் சென்ற குமரனின் தலையிலே தடியால் கடுமையாகத் தாக்கினார்.

தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும், குமரன் தன் கையில் வைத்திருந்த கொடியைக் கீழே விடாமல் மயங்கிச் சாய்ந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மறு நாள் ஜனவரி 11-ஆம் தேதி, மயக்கம் தெளியாமலே உயிர் இழந்தார். அவர் இறக்கும் போது, குமரனுக்கு வயது 28.

பின்னாளில், சுதந்திர இந்தியாவில், காமராஜர் தமிழக முதல் அமைச்சராக இருந்த போது, திருப்பூர் குமரனின் குடும்பம்  சென்னிமலையில், வறுமையில் மிகவும் தத்தளித்தது.

உடனே, சென்னிமலையில், 10 ஏக்கர் நிலத்தை குமரனின் குடும்பத்திற்கு, நன்கொடையாக வழங்கினார் காமராஜர். அவரது பெருந்தன்மையை நாடே பாராட்டியது.

தன் தாய் வசித்த வீட்டில், கார்ப்பரேசன் குழாயைக் கூட அனுமதிக்காத காமராஜர், திருப்பூர் குமரனின் தியாகத்தை உணர்ந்து செய்த அறச் செயல் போற்றத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Kumaran death ceremony


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->