உலக அளவில் சரித்திரம் படைத்த தமிழக சிறுமி.. தலைகீழாக கேட்டாலும் தடுமாற்றம் கிடையாது - படைத்த அசாத்திய சாதனை..! - Seithipunal
Seithipunal


மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத் திருக்குறள் மாநாட்டின் குழந்தை இலக்கிய விருதுக்கு திருப்பூர் மாணவி கா.ஓவியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் உலகத் திருக்குறள் மாநாடு-2019 வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பல்வேறு தமிழ்அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில், குழந்தை இலக்கிய விருதுக்கு திருப்பூரைச் சேர்ந்த மாணவி கா.ஓவியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் திருப்பூர் பிளாட்டோஸ் அகாதெமி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கார்த்திகேயன், தனபாக்கியம்.

குழந்தை இலக்கியப் பரிசு பெறவுள்ள ஓவியா திருக்குறளின் 1,330 குறள்களையும் ஒன்றே கால் மணி நேரத்தில் ஒப்பிக்கும் திறமை படைத்தவர்.

மேலும், எந்த வரிசையில், எந்த எண்ணில் எந்தக் குறள் உள்ளது என்பதையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur girl get award from malesiya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->