ஆபாச ஆட்டம் முடிவுக்கு வந்தது.! டிக்-டாக் செயலிக்கு தடை.! உறுதிசெய்த தமிழக அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் சீன நாட்டை சார்ந்த பைட்- டான்ஸ் என்றநிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிக் டாக் ஆப்பில் 15 விநாடிகளுக்குள் தங்களின் கருத்தை படம்பிடித்து வெளியிட முடியும்.

இதனைபயன்படுத்துபவர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆபாசத்துடன் ஆடல் பாடல்கள்மற்றும் நடனத்துடன் ஆபாச கருத்துகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எவ்வித கட்டுப்பாடோ தணிக்கையோ இல்லை.

இதனால், ஆபாசம் நிறைந்த பாடல்களை பாடுவதும், திரைப்படங்களில் வரும் பாடலுக்கு ஏற்ற வகையில் அங்க அசைவுகள் போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதில் இடம் பெறும் பலபதிவுகள்பெண்களை இழிவு படுத்துகின்றன.

மேலும், உலகில் பெரும்பாலான நாடுகளில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி ஆப் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கிடையே பாதிப்பு ஏற்படுத்தியதால், இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் இதனை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இளையதலைமுறையினர் குறிப்பாக குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்ப பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி ஆப் ஐ பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்டது. மேலும் இந்த செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்று தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில். டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அவர்கள், டிக் டாக் நிறுவனம் தாமாக முன்வந்து ஆபாசமாக பதிவுகள் வெளியிடுவோரை கண்டறிந்து அவர்களின் கணக்குகள் முடக்கப்படுமென அறிவித்திருக்கிறது. இந்த டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி'' என்று தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok ban in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->