பேருந்துகளில் கட்டணம் குறைப்பு, அரசின் அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் தனியார் சொகுசு பேருந்துகளின்  போட்டியை சமாளிக்க  கடந்த ஜூலை மாதம்  34 ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், 2  ஏ.சி.இல்லாத படுக்கை வசதி பேருந்துகள், கழிவறை வசதி கொண்ட10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட கழிவறை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு வசதி கொண்ட பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த பேருந்துகளில், தனியார் சொகுசு பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிருப்தி அடைத்துள்ளனர்.

 

மேலும் சில பேருந்துகளில் தனியார் பேருந்துகளை விட, 10 முதல் 15 சதவீதம் வரை அதிக கட்டணம் பெறப்படுகிறது என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால்ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை கொடுத்த மக்கள் நாளடைவில் அரசு சொகுசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.அதனால்  பயணிகளின்  கூட்டம் குறைந்துள்ளது. 

 

குறிப்பாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பயணியின் வருகை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் இதனை சரிக்கட்டும் விதமாக திங்கள் முதல் வியாழன் வரை 
அரசு ஏ.சி. பேருந்துகளில் 10 சதவீதம் கட்டணமும், ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில்  கிலோ மீட்டருக்கு 20 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் மற்றும் ஏ.சி. இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. 

மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும்  ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதற்கு பயணிகள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ticket amount reduced for goverment AC buses


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->