தூத்துக்குடியில், மீண்டும் போலீசார் அராஜகம்! போராட்டத்தில் குதித்த மக்கள் !! - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக தற்போது 10 பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர்.  
 
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.  மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். 

இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே,  தமிழக அரசு நியமித்த ஆணையர் மீது நம்பிக்கை இல்லை எனவே இத வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்  என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை  சி.பி.ஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக கூறி 10 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து  100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi : Sterlite Problme 10 member Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->