மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெட்டி கொலை..! - Seithipunal
Seithipunalதூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தூத்துக்குடி மாவட்டம் அடுத்த ஒட்டப்பிடாரம் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் அக்காநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இதையடுத்து இருவரையும் சமரசபடுத்தி சேர்த்துவைக்க குடும்பத்தினர் ஈடுபட்டனர். இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த, உதயகுமார் மர்மநபர்களால்  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளி குறித்து விசாரித்து வருகின்றனர்.

English Summary

Thoothukudi husband and wife Problem

செய்திகள்Seithipunal