உங்க பிச்சை காசு யாருக்கு வேணும்..! போன உயிர் என் மண்ணுக்கானது..!! தமிழக அரசுக்கு தக்க பதில் தந்த தமிழரசன் குடும்பம்..!! வாயடைத்துச் சென்ற அதிகாரிகள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100 வது நாள் போராட்டதில் 50000 க்கும் பேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுக்க முயன்றும் முடியாமல் போகவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தீடிரென போலீசார் தடியடி நடத்தவே, பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள பதில் தாக்குதல் நடத்தினர். இதில் தெறித்து ஓடிய போலீசார் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஆவார். 

இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது, அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் 'ஜான்சன் தேவசகாயம்' மற்றும் அதிகாரிகள் தமிழரசன் வீட்டிற்கு சென்று, அவரின் குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், மேலும் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஆனால், தமிழரசன் குடும்பத்தினர் இதை ஏற்க மறுத்து, ''அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம். தமிழரசன் உயிர் இந்த மண்ணுக்காக இரையாக்கப்பட்டுள்ளது, அதை விலை பேசவேண்டாம்''. என்று தெரிவித்தனர். இதையடுத்து அரசு அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

தமிழரசன் மரணம் பற்றி அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், ''எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி''. தெரிவித்தனர். 

முன்னதாக, டி.டி.வி.தினகரன் தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி. அவர் அறிவித்த நிவாரண உதவி தொகையையும் [ரூ.3 லட்சத்தை] அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THOOTHUKUDI GUN SHOOT KILLED PEOPLE THE CORRECT WAY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->