திருவண்ணாமலை சிலை காணாமல்போன விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்..! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய தகவல்..!! - Seithipunal
Seithipunal


நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒன்றரை அடி வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் முக்கால் அடி சூலம் திருடு போய் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையடுத்து காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்தது.   இணை ஆணையர் ஞானசேகர்.

உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் வெண்கல வேலும்  காணாமல் போயுள்ளது.

இது குறித்து இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், கடந்த 1 மாதகாலமாக கோயிலில் உள்ள சிலைகளைக் கணக்கெடுத்தோம். 1954-ம் ஆண்டு, முதல் முறையாகக் கோயில் சொத்துகளைக் கணக்கெடுத்து பதிவு செய்து வருகிறோம். அந்தப் பதிவேட்டின்படி கோயிலில் உள்ள சிலைகளின் எண்ணிக்கை மொத்தம் 164  ஆகும்.

இந்நிலையில், கணக்கெடுப்பின்போதுதான் தெரிந்தது வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் வேல் காணவில்லை என்று. கோயில் முழுவதும் தேடிப் பார்த்தோம் ஆனால் சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி பொன்னி செய்தியாளர்களை சந்தித்தார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் காணாமல் போன ஒன்றரை அடி வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் முக்கால் அடி சூலம் பற்றி விசாரித்து வருகிறோம். இந்த சிலைகளை 1959-ல் ஆரணில் இருந்து ஒருவர் கோயிலுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

எனவே அந்த வருடத்தில் இங்கு யாரெல்லாம் அதிகாரியாக பணியாற்றினார்களோ அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் இந்த சிலையை கண்டுபிடிக்க தனிப்படை  அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai Temple Murugar Statue Missing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->