தமிழகத்தில்., 19 ஆயிரம் பிஞ்சுகளை கொலை செய்த போலி மருத்துவரின் வழக்கில் திடீர் திருப்பம்.!! வெளியாகிய திடுக்கிடும் உண்மை.!! - Seithipunal
Seithipunal


 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கேன் மையத்தில் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து கருக்கொலை செய்வதாக சென்னை சுகாதார துறையினருக்கு தகவலை கிடைத்ததை அடுத்து., அதிரடியாக திட்டமிட்டு காவல் துறையினரின் உதவியுடன் கைது செய்தனர். 

அந்த ஸ்கேன் மையத்தை நடத்திவரும் மருத்துவர் ஆனந்தி., அவரது கணவர் மற்றும் இந்த கருக்கலைப்பிற்கு புரோக்கராக பணியாற்றிய ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் என்பவர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., மருத்துவர் என்று கூறிக்கொண்ட ஆனந்தி மருத்துவரே இல்லை என்பதும் அவர் பன்னிரண்டாம் வகுப்பில்  ஸ்கேன் மையம் நடத்தி வந்து கருக்கொலைகள் செய்ததும் தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்., கடந்த 20 வருடங்களில் சுமார் 19 ஆயிரம் பிஞ்சுகளை கொடூரமாக கருக்கொலைகள் செய்தது தெரியவந்தது. 

மேலும் அந்த ஸ்கேன் மையத்தில் சோதனை செய்ததில்., ஆடம்பர வீடு., லிப்ட் வசதி., பழைய காலத்தில் இருப்பது போல் பதுங்கு குழிகள் மற்றும் இரகசிய அறைகள்., நீச்சல் குளம் என்று சொகுசான சோதனை மையமாகவும் வீடாகவும் இருந்துள்ளது., இதனை கண்ட அதிகாரிகள் ஒருகணம் அதிர்ந்துபோனார்கள். 

இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது., ஏற்கனவே இருமுறை சட்டவிரோத கருக்கொலை செய்த குற்றத்திற்கு கைது செய்யப்பட்டதும்., ஜாமினில் வெளிவந்த பின்னர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த சோதனை மேற்கொள்ளும் நாளில் சுமார் 25 பெண்கள் கருக்கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்து கருக்கலைப்பு செய்து சென்றதும்., கடந்த 15 வருடங்களில் சுமார் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கொலைகளை செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரது பெயரில் சுமார் 9 இடங்களில் இருந்த அசைய சொத்துக்கள் மற்றும் ஆனந்தி அவருடைய கணவரின் பெயரில் இருக்கும் வங்கிக்கணக்குகள் அனைத்தையும் காவல் துறையினர் முடக்கினார். 

மேலும் ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் அட்டைகள் இருப்பதால்., இவர்களுக்கு வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா? அல்லது இன்னும் அதிகளவிலான சொத்துக்கள் இருக்கிறதா? என்று காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது பெரும் மனவேதனையை அளிக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

ஆனந்தி மேற்கொண்ட கருக்கொலைகளின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா? என்ற தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. அந்த வகையில்., ஆனந்தி மீண்டும் வெளியே வராத அளவிற்கு குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVANAMALAI ILLEGAL ABORTION DOCTOR CASE TURNING POINT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->