சிதம்பரம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றேன்!! அதிரடியாக அறிவித்த திருமாவளவன்!!  - Seithipunal
Seithipunal


சிதம்பரத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்," வருகிற 4-ந் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம்  நடக்கிறது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு எடுப்போம். 2019 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்  மோதிரம் சின்னத்தில் போட்டியிட முயற்சி செய்வேன். 

அரசு விழாவாக ஆன்மிகத்திற்காகவும், கல்விக்காகவும் பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

இதற்கு முன்னரே, "17-பி என்கிற பிரிவில், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நடத்தை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். 

இது வலுக்கட்டாயமாக பெரும்பான்மையான ஆசிரியர்களை பணிக்கு திரும்ப வைத்திருக்கிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பல லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அரசு பெற்று இருக்கிறது. அவர்களிடம் தமிழக அரசு என்ன பதில் செல்ல போகிறது?

இது தொடர்பாக முதலமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? என்று தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை கூட செய்யாமல் அவர்களை இவ்வாறு அச்சுறுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma says will be compete in chidambaram thogudhi in ring


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->