"எந்த தொகுதியா இருந்தாலும் பரவாயில்லை கொடுங்கள் " திருமாவளவன்!! அதிமுக-பாமக கூட்டணிக்கு பின் திருமாவின் முடிவு!!  - Seithipunal
Seithipunal


அதிமுக பாமக இடையே கூட்டணி வெளியாகியுள்ளதை தொடர்ந்து விசிக திருமாவளவன் அவர்கள் அது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 

காவிரி நீர் பாசனம், கோதாவரி, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு, படிப்படியான மதுவிலக்கு, மணல் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

புதிய அணை கட்ட வேண்டும். பொதுத்துறை வங்கியில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்ற அதிமுகவின் வாக்குறுதி அடிப்படையில் தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அதிமுக பாமக கூட்டணி குறித்து திருமா, " அதிமுக பாமக கூட்டணி அறிவிப்பு ஒன்றும் எனக்கு புதிதாக தெரியவில்லை. இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது தான். 

இதில் ஆச்சர்யப்பட எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது அதிமுகவிற்கு பலம் அளிக்கும் என நினைப்பது தவறு. தேசிய சனாதன தர்மத்தை வேரறுத்து மதச்சார்பற்ற ஒரு கூட்டணியை திமுக உருவாக்கி இருக்கிறது. 

அது மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. திமுகவுடனான கூட்டணி குறித்து தங்களது நிலைப்பாடு இன்னும் வெளிப்படையாக பேசப்படவில்லை. என கூறினார்.

பின்னர், சிதம்பரம் தொகுதியில் மட்டும் தான் நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா? என செய்தியாளர் கேட்டதற்கு, " எந்த தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. சிதம்பரம் தொகுதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma says about chidambaram batch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->