அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை திருடிய மர்ம நபர்கள்! தலைமையாசிரியர் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் அரையாண்டு தேர்வுக்கான தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகியவற்றுக்கான வினாத்தாள்கள் கொண்ட பண்டல்கள் வழக்கம்போல் ஒரு தனி அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்தன. 

பின்னர், பள்ளியின் நேரம் முடிந்து வழக்கம்போல் பூட்டிவிட்டு அனைவரும் சென்று விட்டனர். இதையடுத்து மறுநாள் பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடாச்சலம் அந்த அறையில் உள்ள வினாத்தாள் பண்டல்களை பார்க்க சென்றுள்ளார். அவர், அங்கு சென்று பார்க்கும்போது அந்த வினாத்தாள் பண்டல்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தலைமையாசிரியர் விசாரிக்கையில் யாரும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர். பின்னர், அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theft of papers for half yearly examination The decision made by the headmaster!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->