போலீஸ் எஸ்.பி-யை நேர்மையாக செயல்பட விடாமல் தடுக்கும் ஆளும் கட்சி அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையத்தில், சில தினங்களுக்கு முன்பாக, அடிதடி வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
    
பின், அந்த நபர், தனக்கு நெஞ்சு வலி என்று சொன்னதால், அவரை, மருத்துவ பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
    
இந்த தகவலை, அங்கே பணியில் இருந்த தனிப்பிரிவு எஸ்.ஐ. மற்றும், ஏட்டு ஆகியோர், ஈரோடு மாவட்ட எஸ்.பி்-க்கு தகவல் அனுப்பாமல் இருந்தனர்.
    
இந்த விஷயம் எஸ்.பி- காதுக்கு சற்று லேட்டாகச் சென்றது. உடனே, எஸ்.பி. அந்த இரண்டு பேரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
    
இந்த இருவரும், கோபி செட்டி பாளையம் பகுதியில், சட்ட விரோதமாக, கஞ்சா விற்பவர்கள் மற்றும், கள்ளத் தனமாக மது விற்பவர்களிடம், மாதம் தோறும் வலுவாக மாமூல் பெற்றுக் கொண்டிருந்தனர்.
    
அதனால், அவர்கள், வெளியூருக்குச் செல்ல விரும்பவில்லை. அதனால், உள்ளுர் அமைச்சரிடம் பணிவுடன் விஷயத்தைச் சொல்லி, தலையைச் சொறிந்து நின்றனர்.
    
உடனே, அமைச்சர், ஈரோடு எஸ்.பி-யைப் போனில் தொடர்பு கொண்டு, “ரெண்டு பேரும் நம்ம பசங்க தான். விடுங்க. ஏதோ தெரியாம செஞ்சிட்டாங்க. அவங்களை டிரான்ஸ்பர் செய்ய வேணாம்” என்று சொல்லி விட்டார்.
    
அதனால், எஸ்.பி-யும், அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் விட்டு விட்டார். இப்போ, அந்த இருவரும், அமைச்சரின் ஆதரவிலேயே, இன்னும் வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the ruling party minister who prevent the police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->