என்ன ஒரு கொடுமை!. தபால் துறையின் அஜாக்கிரதையால் மருத்துவ கனவை இழந்த மாணவன்!. - Seithipunal
Seithipunal


சிவங்கங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவர்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வசந்த் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

ஓ.பி.சி, பிரிவினர் நீட் தேர்வில் 96 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மருத்துவ படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தார் வசந்த். மருத்துவப்படிப்பு விண்ணப்பத்தை  விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளை அறிவித்து விண்ணப்பம் ஜூன் 19-க்குள் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 14-ஆம் தேதி காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்தில் விரைவு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார் வசந்த். ஆனால் விண்ணப்பமானது 9 நாட்கள் தாமதமாக ஜூன் 23-ஆம் தேதி இயக்குனரகத்திற்கு சென்றதால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

                        

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன், இது குறித்து விசாரித்த போது, தபால் மிகவும் தாமதமாக அங்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவர் ஆகவேண்டும் எனபது தனது கனவு என்று இருந்த ஏழை மாணவனின் நம்பிக்கை தற்போது தபால் நிலையத்தின் அஜாக்கிரதையால் தகர்ந்து போயுள்ளது.

இது குறித்து வசந்த் தாயார் ஞானஜோதி கூறுகையில், நாங்கள் விண்ணப்பம் குறித்து இணையத்தில் பார்த்த போது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வந்தது. அதன் பின் விசாரித்த போது தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது. தபால் துறையினர் தாமதாம அனுப்பி என் மகனின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர் என்று வேதனைப்பட்டுள்ளார்.

அந்த பகுதி தபால்நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில், விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார் இதனால் தான் இந்த தாமதம். இதற்காக என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The poor student's dream has collapsed due to the lack of postal department in Tamil Nadu.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->