முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தவனை பிடித்தது காவல்துறை!. கொலைசெய்தவன் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!. - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே மணப்பாறைக்கு அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள தச்சமலை வன பகுதியில் கடந்த 29-ஆம் தேதி  35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இறந்து கிடந்திருக்கிறார்.

அந்த வழியாக சென்றவர்களால் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட பின் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்த்தனர். ஆடைகள் கலைந்த நிலையில் முகத்தில் கல்லை போட்டு முகம் சிதைக்கப்பட்டு அந்த பெண் இறந்திருந்தார். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் சிதைக்கப்பட்டிருந்ததால் இறந்தவர் பற்றியும் கொலை செய்தவர் பற்றியும் துப்பு கிடைக்காமல் காவல்துறை திண்டாடியது.

இந்நிலையில் சடலம் திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி மலர்க்கொடி தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு இரண்டு வயது நிரம்பாத குழந்தை இருந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார் . பின் சில வருடங்கள் கழித்து மலைப்பட்டி அருகே வழக்கறிஞரின்  தம்பி ஒருவரை மணந்திருக்கிறார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மாரடைப்பால் இரண்டாவது கணவரும் காலமாகி இருக்கிறார். அதன் பின் குழந்தைகளை ஆசிரமத்தில் விட்டு விட்டு முதல் மகனுடன் துபாய் சென்று அங்கு வேலை செய்தார்.

மீண்டும் தமிழ்நாடு வந்த மலர்க்கொடி திண்டுக்கல் வந்திருக்கிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகையில் உடன் பணிபுரிந்த தோழியின் கணவரின் நண்பருடன் தகாத உறவுடன் பழகியிருக்கிறார்.

இதனையடுத்து காரியப்பட்டியில் தனது வீட்டில் முருகன் மலர்கொடியை தங்க வைத்து ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில் மலர்க்கொடி வேறு சில ஆண்களோடும் தகாத உறவில் ஈடுபட்டுவந்த விசயம் முருகனுக்கு தெரிய வந்துள்ளது.

ஆகவே தச்சன்குடி வனப்பகுதிக்கு மலர்கொடியை கூட்டி சென்று அங்கு உறவில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின் மலர்க்கொடி பணம் விசயமாக ஏதோ கூற ஏற்கனவே கோபத்தில் இருந்த முருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து மலர்கொடியில் தலையில் போட்டு கொன்றிருக்கிறார்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மலர்கொடியின் புகைப்படத்தை உள்ளூர் ஊடகங்கள் மூலம் காவல்துறையினர் ஒளிபரப்பியதால் மலர்கொடியுடன் பனி புரிந்த பெண்கள் இருவர் காவல்நிலையம் சென்று மலர்க்கொடி பற்றிய தகவல்களை கூறினர். அதன் பின்னர் முருகன் தான் கொலையாளி என்று அவனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது நடந்த சம்பவங்களை கூறிய முருகன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

இதனையட்டி கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட முருகனை காவல்துறை கைது செய்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The policeman caught him killing the stone on women face


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->