இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழை சிறுவனுக்கு, பாராட்டுவிழா நடத்த காவல்துறை முடிவு!. சிறுவனின் நேர்மையால் குவியும் பாராட்டு!. - Seithipunal
Seithipunal


சாலையில் அனாதையாக கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஏழை மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதியின் மகன் யாசின் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். சில நாட்களுக்கு முன்னர் யாசின் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சலையில் பை ஓன்று இருப்பதை பார்த்து அதை திறந்துள்ளான்.

அதில் பையில் 50,000 ரூபாய் இருந்த நிலையில் அந்த பையை எடுத்து கொண்டு ஆசிரியரிடம் சென்று அவர்களிடம் கொடுத்துள்ளான். அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை காவல்துறையிடம் கொடுக்க முடிவுசெய்து யாசினை அழைத்துக்கொண்டு கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார். மேலும் அந்த சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்தவும் காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பள்ளி சீருடை கிழிந்த நிலையில் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தபோதும் பணத்தை ஒப்படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் யாசினின் நேர்மையை பலரும் பாராட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police have decided to commemorate the 2nd class student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->