வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதை…! பணத்திற்காக கடத்தப்பட்ட கணினி நிறுவன உரிமையாளர்…!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 31). இவர் காரைக்குடி கல்லுாரி சாலையில், கணினி நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவுட் சோர்சிங் முறையில், வெளி நாட்டுப் பணிகளை ஆன்லைனில் செய்து வருகிறார். இவரிடம், இந்த மாதிரியான பணி செய்ய வாய்ப்புக் கேட்டு வந்தார், திண்டுக்கல்லைச் சேர்ந்த வேணுகோபால்.

காளிமுத்துவும், அதற்கு சம்மதித்து, தனது பணிகளை வேணுகோபாலுக்கும் பிரித்துக் கொடுத்தார். அதற்கான பணத்தையும், தவறாமல், வேணுகோபாலுக்கு வழங்கி வந்தார், காளிமுத்து.

கணினி நிறுவனத்தின் வாயிலாக, நிறைய பணம் சம்பாதித்து வரும் காளிமுத்துவைக் கடத்தினால், கூடிய விரைவில் பணக்காரனாகி விடலாம், என்று கணக்குப் போட்டார், வேணுகோபால்.

 நேற்று முன் தினம், காரைக்குடியில், கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த காளிமுத்துவை  காரில் பின் தொடர்ந்து வந்த வேணுகோபால், காளிமுத்துவிடம், முக்கியமான விஷயம், என்று கூறி காரில் ஏற்றினர்.

பின் காளிமுத்துவைக் காரில் கடத்திச் சென்றனர். காளிமுத்துவின் அப்பாவை ஃபோனில் தொடர்பு கொண்டு, 35 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார், வேணுகோபால்.

அதைக் கேட்டு, தன் மகன் கடத்தப்பட்ட விஷயத்தைப் போலீசாரிடம் சொன்னார், காளிமுத்துவின் தந்தை. போலீசார், வேணுகோபாலின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை திண்டுக்கல்லில் மடக்கிப் பிடித்தனர்.

கடத்தப்பட்ட காளிமுத்து, மீட்கப்பட்டார். வேணுகோபாலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்ற மூவரும் கைது செய்யப் பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The owner of the computer Kidnap


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->