திருப்பதியை தொடந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்! - Seithipunal
Seithipunal


மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாக காணப்படுவதால் சாமி தரிசனத்திற்காக 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் காக்க வேண்டியுள்ளது. அப்போது குழந்தைகளின் பசியை போக்க இலவசமாக பசும் பால் வழங்க புது திட்டம்.

திருப்பதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றாலும், மீனாட்சி கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளதால், கை குழந்தைகளூடன் வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு நடுவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவேண்டி இருப்பதால் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 


இதை தீர்க்கும் வகையில், தினமும் 20 லிட்டர் பால் குழந்தைகளுக்காக கொடுக்கப்படையுள்ளது. தேவையென்றால் கூடுதலாக கொடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் அருகிலேயே தாய்பால் புகட்டும் அறை அமைக்கயிருக்கிறது.

இந்த திட்டம் பகதர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the new project in madurai meenaksi amman temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->