இந்தியாவில் உள்ள ஒரே இசைக் கல்வெட்டு..! அதுவும் தமிழனின் கல்வெட்டு..!! தமிழனை பெருமை கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


இசையைப் பயில நவீன யுகத்தில் ஏராளமான கல்லுாரிகள்  வந்து வி்ட்டன. இசையில் முனைவர் பட்டங்களை எல்லாம், ஏராளமானோர் பெற்று வருகின்றனர். இசையை இன்றும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனால், இசையைப் பற்றியும், அதன் அடிப்படையான 7 ராகங்களைப் பற்றியுமான இசைக் கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் உள்ளது.

இங்குள்ள மிகப் பழமையான சிகாநாதர் கோவிலில் உள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகே, இந்த இசைக் கல்வெட்டு, தமிழில் பொறிக்கப் பட்டுள்ளது.

கி.பி.4-ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த பாரதரின் நாட்டிய சாத்திரம் என்ற நுாலுக்கும், சங்கரதேவரின் சங்கீதரத்னகரா நாட்டிய சாத்திரம் என்ற நுாலுக்குமான காலத்திற்கிடையே, சங்கீதம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள கல்வெட்டு இது. இந்தியாவில், வேறெங்கும் இசையைப் பற்றிய கல்வெட்டு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

ஏழு பகுதிகளாக உள்ள இந்த இசைக் கல்வெட்டில், முதல் பகுதியில், ஹரிகாம்போஜி ராகம், இரண்டாம் பகுதியில் கரஹரப்ரியா ராகம், மூன்றாவது நடனமாக்ரிய ராகம், நான்காவது பந்துவாரளி ராகம், ஐந்தாவது அஹரி ராகம், ஆறாவது சங்கராபரண ராகம், ஏழாவது மெச்சகல்யாணி ராகம் என்று ஏழு ராகத்திற்குரிய விதிகளைப் பற்றித் தமிழில் அழகாக கல்வெட்டாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த இசைக் குறிப்பினை வைத்து, அந்தக் காலத்தில், சங்கீதம் பயில்பவர்கள், ராகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார்கள். அந்தந்த ராகங்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.

தற்போது, இந்தக் கல்வெட்டு உள்ள பகுதியில், கற்களாலே பந்தல் அமைத்திருக்கிறார்கள். இந்த இசைக் கல்வெட்டிற்கு அருகிலே, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகரின் புடைப்புச் சிற்பமும் காணப்படுவது, கூடுதல் சிறப்பு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THE MUSICAL STONE IN TAMIL NADU


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->