சமூக விரோதிகளின் கூடாரமாகி வரும் மலை! அதை கண்டு கொள்ளாத காவல் துறை!! - Seithipunal
Seithipunal


பழனியில் பிரதானமான  முருகன் வீற்றிருக்கும் மலைக் கோயிலுக்கு எதிராக, சிறிய குன்று உள்ளது. இது இடும்பன் மலை எனப்படுகிறது. பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள், இடும்பன் மலையில் உள்ள இடும்பனை வணங்கி விட்டு, பின், முருகனை தரிசனம் செய்ய வேண்டும், என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    
பழனிக்கு வருகை தருவோர், பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் குளத்தில் குளித்து விட்டு, பின், இடும்பன் மலை ஏறி, அங்குள்ள இடும்பனை வழிபாடு செய்து விட்டு, அதன் பிறகு, முருகன் கோயிலுக்கு செல்கிறார்கள்.
    
இந்த நடைமுறையை, கேரளாவினர் தவறாமல் பின் பற்றுகின்றனர். ஆனால், அந்த இடும்பன் மலையில், தற்போது, மாலை 6 மணிக்கு மேல், யாரும் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
    
இந்த மலையைச் சுற்றி, பாதுகாப்பு வேலிகள் ஏதும் கிடையாது. இதனால், சாயங்கால வேளைகளில், குடிமகன்கள் அனைவரும், இடும்பன் மலையில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து தான் மது அருந்துகின்றனர்.
    
இதனால், மாலை வேலையில், இடும்பன் மலைக்குச் செல்வதற்கு பக்தர்கள் அஞ்சுகிறார்கள். மேலும், இங்கு தனியாக தம்பதியரோ, காதலர்களோ, பெண்களோ வந்தால், அவர்களை மிரட்டி, அவர்களிடம் உள்ள பணம், நகைகளைக் கொள்ளை அடித்துச் செல்கின்றனர்.
 
பெரும்பாலும் காதலர்களிடம், இந்த போக்கிரித்தனத்தைச் செய்வதால், அவர்கள் வெளியே சொல்லப் பயந்து, ஓடி விடுகின்றனர். பல பாலியல் தொந்தரவுகளும் நடைபெற்றுள்ளது. ஆனால், வெளியே தெரியவில்லை.
    
இரவு நேரங்களில், தினமும் விலை மாதுவைக் கூட்டிக் கொண்டு, இடும்பன் மலைக் கோயிலுக்குச் செல்கின்றனர். இங்கே படிக்கட்டுக்கு கேட்டும் கிடையாது. அதனால், சமூக விரேதக் கும்பலுக்கு, இடும்பன் மலையும், கோயிலும் வரப்பிரசாதமாக உள்ளது.
    
மேலும், பைபாஸ் ரோட்டிலிருந்து, இடும்பன் மலைக்குச் செல்லும் வழியில், வரிசையாக அந்த மலை அடிவாரத்தில், பிக்பாக்கெட் அடிப்பவர்கள், கஞ்சா விற்பவர்கள், மது அருந்துபவர்கள் என வரிசையாக, சமூக விரோதிகள் உள்ளனர்.
    
இதனால், மாலை வேலையில், இந்தப் பக்கம் செல்வதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய காவல் துறையினர், இந்தப் பக்கம் ரோந்துப் பணிக்காக, வருவதேயில்லை, என இப்பகுதி மக்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the mountain whch is the tent of social enemies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->