பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ராமர்-லட்சுமணரா?. கூட்டத்தில் பேசிய அமைச்சர்!. - Seithipunal
Seithipunal



திருக்காட்டுப்பள்ளியில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நேற்று திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ரெத்தினசாமி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார்.

கூட்டத்தில்  பேசிய காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாதாடி, போராடி, உண்ணாவிரதம் இருந்து சட்டப்போராட்டம் நடத்தி அரசிதழில் வெளியிட செய்தார் என்று கூறினார்.

அவரது மறைவிற்கு பின்னர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க தீர்ப்பை பெற்று தந்தார்கள் என கூறினார்.

சட்டசபையில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் என்று கூறினார். காவிரி டெல்டா மாவட்டம் மட்டும் அல்லாமல் 18 மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு நிலைக்கு ஏற்ப காவிரி டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கூடிய விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது என்று கூறினார்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்ய நினைத்த அணைத்து திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். ராமர்-லட்சுமணர் போல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Minister said that Rama-Lakshmana is like Edappadi Palaniasiyam and Panneerselvam are ruling the state.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->