நசிந்து போன நகைக்கடைத் தொழிலால்..! வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்ட குடும்பம்..!! - Seithipunal
Seithipunal


ஒரு காலத்தில், சிறு சிறு நகை வியாபாரிகள் கூட, தங்களுக்கென்று, தனியாக வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு, திறம்பட தொழில் செய்து வந்தனர். ஆனால், தற்போது நகைக் கடைகள் எல்லாம், கார்ப்பரேட் நிறுவனமாக மாறி விட்டதால், எண்ணற்ற சிறு வியாபாரிகள், தொழில் செய்ய வழி இல்லாமல் தவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வசித்தவர், குணசேகரன் (வயது 50). இவரது மனைவியின் பெயர் அமுதா (வயது 45). இவர்களது, 18 வயது மகள், தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறார்.

17 வயது மகன், குடும்ப வறுமையின் காரணமாக, மேற் கொண்டு படிக்காமல், வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இது தவிர, 14 வயதில், இளைய மகனும் குணசேகரனுக்கு உண்டு.

நகைக்கடை நடத்தி வந்த குணசேகரனுக்கு, தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரிக்கட்ட இயலாமல் தவித்தார் அவர். குடும்பமே வறுமையில் வாடியது.

நேற்று முன் தினம் இரவு, வீட்டில் நான்கு பேரும் துாங்கிக் கொண்டிருந்தனர். மறு நாள் காலை, 9 மணிக்கு 14 வயது சிறுவன், எழுந்த பார்த்த போது அதிர்ந்தான். அவனது தந்தை சயனைட் சாப்பிட்டு, உயிர் துறந்திருந்தார்.

அவனது அக்காவும், அம்மாவும் துாக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனைக் கண்டு, அந்த சிறுவன் கதறி அழுதது, காண்பவரைக் கண் கலங்கச் செய்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THE JEWELERS SHOP OWNER FAMILY SUICIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->