சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற தூத்துக்குடி சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டுக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் "இங்கிலாந்தின் தி கார்டியன்" பத்திரிக்கையில் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 

காவல்துறையினரின் இந்த சட்ட விரோதப் போக்கைக் கண்டித்தும், இந்த கொடூர சம்பவத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான "தி கார்டியன்" தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தி கார்டியன் நாளிதழில் வெளியான செய்தியை படிக்க: https://www.theguardian.com/world/2018/may/23/police-in-south-india-accused-of-mass-after-shooting-dead-protesters

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், "தி கார்டியன்" பத்திரிக்கையில் வெளியான செய்தி, சர்வதேச அளவில் தூத்துக்குடியின் கவனத்தை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the internationally issue in thuthukudi gun fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->