இன்ஸ்பெக்டர்களை விட டிரைவர்களுக்கு அதிகரிக்கும் வருமானம்! எப்படினு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் திருட்டு மணல் அள்ளும் கும்பல் தங்கு தடை இன்றி, எந்தவித பயம் மற்றும் தயக்கம் இன்றி, சுதந்திரமாகச் செயல் படுகின்றனர்.
    
இதனைக் கண்டு பிடிக்க வரும் போலீசுக்கு, அவர்களே, நினைத்துப் பார்க்க முடியாத அளவில், லட்சக் கணக்கில், பணத்தை மாமூலாக அள்ளி எரிகின்றனர், கடத்தில் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
    
இதனால், மணல் திருட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும், தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, யார் முதலில் போனாலும், கிடைக்கும் மாமூலில் பங்கு கொடுத்து விட வேண்டும், என்று டீல் செய்து கொண்டார்களாம்.
    
இவர்களை விட, போலீஸ் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தான் செல்வாக்குடன் தற்போது திகழ்கிறார்கள்.
    
எங்கு ரெய்டு நடக்கப் போகிறது? எந்த இடத்திற்கு, திருட்டு மணல் கும்பலைப் பிடிக்க போலீசார், எந்தெந்த வழியாக வருகின்றனர், யார் யார் வருகின்றனர், போன்ற தகவல்களை, கடத்தல்காரர்களுக்கு, டிரைவர்கள், வாட்ஸ் அப்பிலும், போனிலும் முன்னமே சொல்லி விடுவதால், நேர்மையான பல போலீஸ் அதிகாரிகள், இந்தக் கும்பலைப் பிடிக்கச் சென்றாலும், தப்பி விடுகின்றனர்.
    
இதற்கு கை மாறாக, இன்ஸ்பெக்டர்களைக் காட்டிலும், டிரைவர்களுக்கு, அதிக அளவில் தொகை தரப் படுகிறதாம். மேலும், இந்த டிரைவர்கள் மேலிடத்திலும், செல்வாக்குடன் இருப்பதால், இவர்கள் மீது, எந்த நடவடிக்கையும், இடமாற்றமும் செய்ய முடியாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் தவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the increase in driver is more than police inspectors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->