சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட சுற்றிக்கை!! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை தற்போது சுற்றிக்கை வெளியிட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் அயல்நாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ரத்த மாதிரிகளை வாங்கும் போது, 5 விதமான பரிசோதனைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனைத்து மாவட்ட ரத்த வங்கிகளுக்கும்  தமிழக சுகாதாரத்துறை சார்பில் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது, ரத்த மாதிரிகளை வாங்கும் போது, 5 விதமான பரிசோதனைகளை கடைபிடிக்க  வேண்டும் எனவும்,  ரத்தம் அளிப்போர், ரத்தம் பெறுவோர் பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவு  பிறப்பித்து சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The health department is currently in circulation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->