சிறுமி என்று கூட பார்க்காமல், தன் மகளை கள்ளகாதலனுக்கு திருமணம் செய்து வைத்து, மகளுக்கு துரோகம் செய்த தாய்!.. - Seithipunal
Seithipunal



அரியலூர் மாவட்டத்தில் ராஜூ என்ற 25 வயது  கூலித்தொழிலாளிக்கு சத்யா என்ற 32 வயது நிரம்பிய பெண்மணி தனது 16 வயது மகளை கட்டாயப்படுத்தி இரண்டு ஆண்டிற்கு முன்னர்  திருமணம் செய்துவைத்துள்ளார். சத்யாவின் மகள் தனது வாழ்கை சிறப்பாக அமைய வேண்டுமென்று அம்மா தனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என நினைத்தார்.

இந்நிலையில் மருமகனுக்கும், சத்யாவிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இதனை சத்யாவின் மகள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார், இதன்பிறகு அந்த சிறுமி தனது வாழ்க்கையை கருத்தில்கொண்டு ராஜூவை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று தனி குடும்பம் நடத்தி வந்தார்.

      

இதனையடுத்து அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையை  பார்த்து கொள்வதற்கு சத்யாவை வரச்சொல்லுமாறு ராஜூ தன் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் இருவருக்கும் பெரும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜூ, தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து ராஜூவின் மனைவி ஒரு முடிவுக்கு வந்தார். 

தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பு கருதி தன்னை சிறு வயதிலேயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் சத்யா, சத்யாவின் தாய், கணவர் ராஜூ, ராஜூவின் தாய் என ஆகியோரின் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து ராஜூ, மாரியம்மாள், சத்யா, சாந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தன் மகள் என்று கூட பாராமல் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl's mother is forced to marry a 16-year-old daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->