ரிட்டையர்டு ஆனதும்...! வேறொரு தொழிலுக்குத் தயாரான கஸ்டம்ஸ் ஊழியர்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் பரமக்குடியில், அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்டு, சிலர் வணிகர்களிடம் அடாவடியாகப் பணம் வசூலித்து வந்தனர்.

இது தொடர்ந்ததால், இது பற்றி பரமக்குடியில் வசி்க்கும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தில் புகார் செய்யப் பட்டது. அடுத்து, இப்படி வருபவர்களை பிடித்து வையுங்கள், என்று சங்க நிர்வாகிகள், வியாபாரிகளுக்கு ஆலோசனை சொன்னார்கள்.

இதனால், உணவு விடுதி நடத்துபவர்கள், உஷாராக இருந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக, பரமக்குடி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்டு, ஒருவர் பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்.

இது பற்றி, வியாபாரிகள் சங்கத்திற்கு, தகவல் அனுப்பப்பட்டது. இதனால், அந்த சங்கத்தினைச் சேர்ந்தவர்கள், உடனே, மெயின் பஜாருக்கு வருகை தந்தனர்.

அவர்கள் வந்து கொண்டிருந்த போது, அந்த நபர் வசூல் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அதிரடியாக விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். அதனால், சங்க நிர்வாகிகள் அவரைச் சிறைப் பிடித்து, போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

போலீசார் வந்து அவரை விசாரித்த போது, அவர் மதுரை கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றும் அசோகன் எனத் தெரிய வந்தது.

இன்னும் சிறிது நாட்களில், ரிட்டையா்டு ஆகப் போவதால், இந்த மாதிரி நடந்து கொண்டதாகவும், தன்னை மன்னித்து விட்டு விடும் படி எல்லோரிடமும் மன்றாடினார். அதனால், வியாபாரிகள், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the custom officer in forgery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->