இனி கொலை கொள்ளை சம்பவம் நடக்காது!. விரைவில் அமல்படுத்தப்படும் திட்டம்!. கமிஷனர் பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunal


சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புதிதாக நடைபாதை, உடற்பயிற்சி கூடம், நூலகம், மழை நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்திற்கும் நேற்று திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இவற்றை நேற்று மாலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாப்பூர் பகுதியில் இதுவரை 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சென்னை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தில் உள்ளன. செப்டம்பர் மாதத்துக்குள் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுமையாக முடிந்துவிடும்.

                                     

பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் சென்னை முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளோம். பொதுமக்கள் சிலர் அவர்களின் சொந்த செலவிலே அவர்கள் இருக்கும் பகுதியில் கேமராவை வைத்துள்ளனர். இதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றவாளிகளையும் எளிதில் கண்டுபிடிக்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

                                                      

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்போது ஒன்றிரண்டு கேமராக்கள், சாலையை கண்காணிக்கும்படி அமைக்க வேண்டும். வணிக நிறுவனங்களும் சாலையை பார்த்தபடி கேமராக்களை அமைக்க வேண்டும் என அரசு விதி உள்ளது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதன்படியே செய்கிறார்கள். 

இது அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழக்தில் முற்றிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையும் என அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The commissioner said that surveillance cameras would be fitted across Chennai by September.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->