அந்தர் பல்டியடித்த தங்கதமிழ்செல்வன்.. தினகரன் அணிக்கு திடீர் சிக்கல்: இன்று காலை 10 மணியளவில் தேனியில் அரங்கேறும் அதிரடி சம்பவம்..? - Seithipunal
Seithipunal


தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக தொகுதி மக்களுடன் தங்கத்தமிழ்செல்வன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எதிர்த்தும் முதல்வர் பழனிசாமியை பதவி நீக்க கூறியும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் கூறியதால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வேறுபட்ட தீர்ப்பை வழங்கியது. முதலாவதாக தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரபானர்ஜி, சட்டசபையில் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

மேலும் சுந்தர் தலைமையிலான அமர்வு, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததன் காரணமாக இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்றும், நீதிபதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவு தொடர்பாக தனது தொகுதி மக்களிடம் தங்கத்தமிழ்செல்வன் ஆலோசனை நடத்துகின்றார்.

இன்று காலை 10 மணியளவில் ஆண்டிப்பட்டியில் இந்த கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதா? வேண்டாமா? என மக்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangatamilselvan-consult-with-his-constituency-people-about-resign-the-mla-posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->