கூட்டணியும், கொள்கையும் ஒன்று இல்லை!! அந்தர் பல்டி அடிக்கும் தம்பிதுரை!!  - Seithipunal
Seithipunal


கரூரில் இன்று மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தம்பிதுரை, ' இந்திய ராணுவவீரர்களின் செயல் வியக்கத்தக்கது. 

பயங்கரவாதிகளை ஒழித்துகட்டி இருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. பிரதமர் மோடி நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 

நாட்டில் உள்ள அனைவரும் இந்த செயலை பாராட்டுகின்றனர். பாகிஸ்தானும், தீவிரவாதிகளும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்தால் அதை எதிர்க்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கின்றது. 

தமிழக கூட்டணி நிலவரத்தை பொறுத்தவரை திமுக காங்கிரசை ஒழித்துக்கட்டவே நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இது தேர்தலுக்கான கூட்டணி தான். இது கொள்கையை தீர்மானிக்காது. 

பாஜகவின் வளர்ச்சிக்காக நாங்கள் துணை போக மாட்டோம். மத்திய அரசு மாநில உரிமைகளில் தலையிட்டால் நிச்சயம் கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் அதிமுக நிச்சயம் பின்வாங்காது' என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambidurai says about admk bjp coalition


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->