திருப்பூரில் தீவிரவாதிகள்! அதிர்ச்சியை கிளப்பிய அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில்  பன்னாட்டு கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘போக்கோ-ஹராம்’  என்ற   அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆராய்ந்த அமெரிக்கா,  2013ல் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த தீவிரவாத அமைப்பில் உள்ள நைஜீரிய இளைஞர்கள், இந்தியாவில் ஊடுவிருப்பதாக அதிர்ச்சியை கிளப்பியது.  

Related image

இதனை அடுத்து சுதாரித்து கொண்ட மத்திய உளவு பிரிவினர், இந்தியாவில் உள்ள நைஜீரியர்களின் ஆவணங்களையும், எத்தனை பேர் நாட்டில் உள்ளனர் என்பதையும் கணக்கெடுத்தது. அதில் கடந்த 3  ஆண்டுகளில் 4,000 பேர் வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் வேலை செய்து வருகின்றனர்.

`

Related image

இந்நிலையில் தற்போது திருப்பூரில் தங்கி இருக்கும் நைஜீரியர்களில், ''போக்கோ-ஹராம்'' என்ற  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளனரா என்று  உளவுப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உள்ளிட்ட தொழில்களில் கடந்த 20 ஆண்டாக நைஜீரியர்கள் ஈடுபட்டு வருவதால் காதர்பேட்டை  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான நைஜீரியர்கள் பணி புரிகின்றனர். இவர்கள், இந்தியாவில் தங்கி தொழில் செய்வதற்கான  ஆவணங்களை  சமர்ப்பிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். ஆவணங்கள்  சமர்ப்பிக்காதவர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறவும், மீறி இருந்தால் கைது  செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

திருப்பூர் மாவட்டத்தை தொடர்ந்து சட்ட விரோதமாக வர்த்தகர்கள் என்ற பெயரில், பயங்கரவாத அமைப்பை  சேர்ந்தவர்கள் யாரேனும்  தங்கியுள்ளனரா என்று கண்டறியும் பணியில் ஈரோடு, கோவை மாவட்ட உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorists in Tirupur Shocked news in America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->