மண்ணை திருடி விற்றவன்..! இன்று எம் கலைநயமிக்க சிலைகளையும் விற்கிறான்..!! விழுப்புரத்தில் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் கொள்ளை..!!! - Seithipunal
Seithipunal


பழனியில் தொடர்ந்த சிலை மோசடிகள்,  தமிழகத்தின் பல கோயில்களிலும் நடைபெற்றிருக்கிறது. தற்போது, சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலையிட்ட பிறகு, பழனி கோயில் சிலை மோசடியில்,  முன்னாள் அதிகாரிகள் ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர்களும், அவர்களைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப் படலாம், என்று அஞ்சப் படுகிறது. இதே போல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ள சிலைகள் எல்லாம் மாயமாகி விட்டதென தெய்வீகன் (வயது 53) என்பவர், தந்த தகவலின் அடிப்படையில், இந்தக் கோயிலை சோதனை செய்த போது, இடிபாடுகளுடன், மிக மோசமான நிலையில் இருந்த கோயிலைக் கண்டு, ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்த பழமையான சிலைகள் ஒன்று கூட தற்போது இல்லை என்பதையும் அறிந்து கொண்டனர். இந்தக் கோயிலில் இருந்த, சந்தான கோபால கிருஷ்ணனின் ஐம்பொன் சிலை காணவில்லை, என்ற புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் நேற்று ஆய்வினை மேற் கொண்டனர்.

இது தொடர்பாக, அறநிலையத்துறை ஆய்வாளர், சரவணன், போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து, போலீசார் நேற்று கோயிலை ஆய்வு செய்து, முன்னாள் குருக்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.
தொடர்ந்து, இதே பகுதியில் உள்ள, அர்த்தநாரீசுவரர் கோயிலையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிலைகளும் மாயமாகி விட்டது, அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEMPLE GODS ROBBERY


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->