இன்னும் சற்று நேரத்தில், இரண்டாவது முறையாக முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் !! - Seithipunal
Seithipunal


ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார்.

தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று முன் தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பாஜக படு தோல்வியை சந்தித்தது.

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கானா  ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக  சந்திரசேகர ராவ் தேர்வு செய்யப்பட்டார்.  

இந்நிலையில், தெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக இன்று சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இன்று மதியம் 1.30 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana Chief Minister CM


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->