லட்ச கணக்கில் லஞ்சம்..! பணியிட மாறுதலுக்கு அள்ளி குவிக்கும் அரசியல்வாதிகள்..!!  - Seithipunal
Seithipunal


ஆசரியர் கவுன்சிலிங்கில், காலியிடங்கள் மறைக்கப் பட்டதால் ஆசரியர்கள் முற்றுகை…

விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடங்களைத் தேர்வு செய்ய நுாற்றுக் கணக்கான ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம, வேலுார், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மட்டுமே காலி இடங்கள் இருப்பதாக காட்டப் பட்டது. தென் மாவட்டம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் வெளியிடப் படவில்லை.

பணி மூப்பு அடிப்படையில், இட மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், பலர் மாறுதல் கோர இடமின்றி வெளியேறினர்.

அவர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கவுன்சிலிங்கில் செல்லலாம் என்று கூறப் பட்டது. இதனால், தென் மாவட்டங்களை எதிர் பார்த்து வந்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு, கவுன்சிலிங்கில் செல்ல விருப்பம் இல்லாதவர்கள், தங்களுக்கு விருப்பம் இல்லை, என்று எழுதிக் கொடுத்துச் செல்லுமாறு, ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். 

இதனால், கோபம் அடைந்த ஆசிரிய, ஆசிரியைகள் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கு, லட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, இட மாறுதல் அளிக்கின்றனர், என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEACHER TRANSFER IN LOT OF ILLEGAL METHOD


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->