அன்பின் உச்சக்கட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! கத்தி கதறி... அழுது புரண்டு... சாதித்துக்காட்டிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு வெளியான சாட்டை படத்தில், சமுத்திரக்கனியை சுற்றி சூழ்ந்து ''சார் போகாதீங்க சார்'' என்று கட்டிப்பிடித்து அழுவார்கள். தற்போது 2 தினங்களுக்கு முன் அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர் ''பகவானை'' அப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல விடமால் கட்டி பிடித்து அழுதனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே, இதனை பார்த்த மேல் அதிகாரிகள் அவரின் அணியிடை மாற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் உறவு என்பது அன்று முதல் இன்று வரை மதிப்பு மிகுந்ததாகவே இருக்கிறது. ஆசிரியர் பகவான், 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு சமீபத்தில் வழங்கப்பட்டது.

இதனையறிந்த அப்பள்ளி மாணவ மாணவிகள், நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவான் பணியிட மாற்ற உத்தரவு நகலை வாங்கிக் கொண்டு செல்ல முயன்றார். ஆனால், அப்பள்ளியின் மாணவ மாணவியர்கள் ஆசிரியரின் காலை பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது என்று கட்டி பிடித்து கதறி அழுதனர்.

இதனால் ஆசிரியர் மனம் உருகி அழுத்த காட்சி சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வைரல் ஆனது. இந்நிலையில், அவரது பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அப்பள்ளி மாணவ மாணவிகளிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEACHER TRANSFER CANCELLED


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->