ஆசிரியர் அடித்ததில் மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு, கணித ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஆசிரியர், நேற்று முன் தினம், வீட்டுப் பாடம் செய்து வராத மாணவர்களை, பனை மட்டையால் அடித்துள்ளார்.

இதனால், அந்த 7-ஆம் வகுப்பில் படிக்கும் 13 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றதும், மாணவர்கள், தங்களது பெற்றோரிடம் இது பற்றிக் கூறினர்.

பெற்றோர்கள், காயம் அடைந்த மாணவர்களை, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மாணவர்கள் அடிக்கப்பட்ட செய்தி அறிந்த, பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ், மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது, மாணவர்களின் பெற்றோர்கள், அவரை முற்றுகை இட்டு, அந்த கணித ஆசிரியரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினர்.

அதற்கு அந்த தலைமை ஆசிரியர், “தவறு செய்த ஆசிரியர்கள் மீது, புகார் கொடுங்கள். கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறி உள்ளார். ஆசிரியர் அடித்து, 13 மாணவர்கள் காயம் அடைந்தது, அந்தப் பகுதியில், பரபரப்பாக பேசப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher punished in students admitted to hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->