ஆப்பிள் நிறுவனத்தை முறியடிக்கும் டிசிஎல்!! மடக்கினால் வாட்ச்!! விரித்தல் ஸ்மார்ட்போன்!! - Seithipunal
Seithipunal


சாம்சங், சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டடுள்ளது. இதை முறியடிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின், 2016 ஆம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஐபோனினை ஆப்பிள் உருவாக்க இருப்பதாக தெரிகிறது.

ஆனால் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் காப்புரிமையின் படி புதிய போன் பாதியாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு மோட்டோரோலா பதிவு செய்திருந்த காப்புரிமையில் காணப்பட்டது.

சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விரிக்கப்பட்ட நிலையில், டேப்லெட் போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் வடிவமைப்பில் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே போனினை வளையச் செய்யும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்கள் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த வகையில் புதிய சாதனத்தை மேக்புக் அல்லது ஐபேட் போன்று இருக்கும் என தெரிகிறது.

ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் வெளியாகியிருப்பதால் மடிக்கக்கூடிய ஐபோன்கள் இந்த ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.

இந்நிலையில் டிசிஎல் நிறுவனம் லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக களமிறங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை, ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்தலாம். 

இந்த ஸ்மார்ட் வாச் 2020ஆம் ஆண்டு முதலிலே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய முயற்சியின் மூலம் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும். மேலும்  'ஆப்பிள்' நிறுவனத்தை டிசிஎல் பின்னாடி தள்ளும் எனக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TCL leak new smartphone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->